உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பௌத்த பிக்குகளாக இருந்தாலும் சட்டத்தின் முன் சகலரும் சமமே.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயத்தில் சட்டம் நியாயமாக நடைமுறைப்படுத்தப்படும். பௌத்த பிக்குகளாக இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பௌத்த பிக்குகளாக இருந்தாலும், அவர்கள் நாட்டிலுள்ள நடைமுறைச் சட்டத்துக்கு முரணான வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றி நிச்சயம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதைய சூழலிலும் கூட, அவ்வாறு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக எந்தவொரு தடையுமின்றி சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாலியல் தொழிலாளி என மிக மோசமாக விமர்சித்தமை மற்றும் அவதூறு பரப்பியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொலிஸார் இது குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த பொலிஸ் விசாரணைகளின் போது வெளிவரும் உண்மைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே, அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களிலோ அல்லது ஏனைய வழிகளிலோ அவ்வாறு பொறுப்பற்ற முறையில் அவதூறு தெரிவிக்கப்பட்டமையால், பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கும் அவரது தாய் உள்ளடங்கலான ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய கடுமையான மன உளைச்சல்களுக்கும் சமூகப் பாதிப்புக்களுக்கும், அவ்வாறு கருத்து வெளியிட்ட நபர் சட்டரீதியாகப் பொறுப்பு கூற வேண்டும். இதனை மிகச் சாதாரணமான ஒரு விடயமாகக் கருதி, எவரும் இலகுவாகக் கடந்து சென்றுவிட முடியாது.

இந்தச் சம்பவம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் இதுவரையிலான காலப்பகுதிக்குள் 15 இற்கும் மேற்பட்ட நபர்களிடம் மிக விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத் தன்மைக்கு அமைவாக, அடுத்தடுத்து மேலதிக சாட்சிப் பதிவுகளும் இடம்பெறும். நீதிமன்றத்தின் ஊடாக இந்த விடயத்தில் முற்றிலும் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

இலங்கைப் பொலிஸாரும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இதில் முழுமையான ஈடுபாட்டுடன், ஒருங்கிணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0