உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்


மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி  ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும்,

அதற்கான பணம் ஏற்கனவே வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“தேர்தலுக்கான பணம் ஒருவேளை ஒதுக்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட, மக்கள் இறையாண்மையை மதித்துத் தேர்தலை நடத்துவதற்காகத் தேவை ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு ஒன்றின் மூலம் அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவே பணம் ஒரு தடையல்ல.” – என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள முக்கிய தடை  தேர்தல் சட்ட விதிகளில் உள்ள முரண்பாடுகளும் சிக்கல்களுமே என்றும் அவர் விளக்கமளித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தகுந்த தீர்வு காண்பதற்காகத் தற்போது விசேட நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழு செயற்பட்டு வருகின்றது.

இது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றக் குழுவின் மூலம் தேவையான சட்டக் கட்டமைப்பு சீர்செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்டவுடன்,

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தற்போதைய அரசு தேர்தல்களைக் கண்டு அஞ்சுவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர்,

மக்களின் தேர்தல் உரிமைகளை அரசு எப்போதும் பாதுகாக்கும் என்றும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0