உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகிக்கும் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் செயற்பட்டு வந்த இவரை, டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள ஷிரான் பாசிக், ஈரானிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவிலான இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பு காரணமாக, இவர் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினராலும் தேடப்பட்டு வரும் மிக முக்கிய குற்றவாளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலிருந்து தப்பியோடி டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஷிரான் பாசிக், அங்கு பெரும் கோடீஸ்வரரைப் போலத் தன்னைத் காண்பித்துக்கொண்டு, தலைமறைவாக இருந்ததாக அறியப்படுகிறது. அவர் டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த கைது நடவடிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் டுபாய் அரசாங்கத்தினால் இலங்கை அதிகாரிகளுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0