உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக ஒழுக்காற்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கோட்டை மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் மார்கஸ் பெர்னாண்டோ விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இவர்கள் பிடிபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர், ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டு, பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மொத்தம் 7,530 மில்லிகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாணவரிடம் 3,410 மில்லிகிராம் ஹஷிஷ் மற்றும் 20 வெளிநாட்டு சிகரெட்டுகளும், மற்றொரு மாணவரிடம் 4,120 மில்லிகிராம் ஹஷிஷ் மற்றும் 20 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தினுள் அதனை விற்பனை செய்யவும் முற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் பேராதனை பல்கலைக்கழக விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கிடைக்கும் தகவல்களை அடுத்து, ஒழுக்காற்று பாதுகாப்புப் பிரிவினர் இவ்வாறான சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0