உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீரில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

படல்கும்பர பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் சிலரும் மாணவர் குழுவொன்றும் கிரிந்த கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர் காக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆபத்தான நிலையில் இருந்த ஆசிரியர் ஒருவரும் சிறுமியும் சிகிச்சைக்காக கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0