உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ பிரிவில் உள்ள இருவர் வீட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 18 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் எரிவாயு வெற்று சிலிண்டர் கொள்ளை இட்டு சென்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட வீட்டார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதன்போது அப் பகுதியில் தொடர்ந்து இவ்வாறான கொள்ளையில் ஈடுபட்டு வந்த 21, 38 வயதுடைய நிரோஜன், திலீபன் என்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாமிமலை கவரவலை ஏ பிரிவை சேர்ந்தவர்கள்.

இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 18 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டதுடன் எரிவாயு வெற்று சிலிண்டரும் மீட்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நேற்று 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் அவர்கள் இவர்கள் இருவரையும் எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் திருடப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0