உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மலையக மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அவர்களின் இருப்புக்கான போராட்டங்களை நவீன அழகியலோடு மேடையேற்றும் ஒரு உன்னத முயற்சியாக, சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பில் உருவான ‘அக்கினிக்குஞ்சு’ மேடை நாடகம் கடந்த 23ஆம் திகதி கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் அரங்கேறியது.

கடந்த 23 ஆம் திகதி மாலை 6 மணியளவில் சங்கு கலைக்கழகத்தின் முதலாவது கன்னி நாடகமாக (Debut Performance) மேடையேற்றப்பட்ட இந்நாடகம், சுமார் ஒரு மணித்தியால ஆற்றுகையாக பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தி பார்வையாளர்களை அதிர வைத்திருந்தது.

மூன்று பக்க அரங்கும் பார்வையாளர்களின் பங்களிப்பும்
​வழக்கமான மேடை நாடக வடிவங்களைத் தாண்டி, அரங்கின் மூன்று பக்கங்களிலிருந்தும் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் இதன் தயாரிப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது தனித்துவமான ஈர்ப்பை ஏற்படுத்தியது அம்சமாகும்.

நாடகத்தைப் பார்க்கின்ற அதேநேரம், தங்களுக்கு எதிரே அமர்ந்திருக்கும் சக பார்வையாளர்களின் உணர்வு வெளிப்பாடுகளையும் கவனிக்கும் ஒரு புதுவிதமான அனுபவத்தை இந்த நாடகம் வழங்கியது.

இதனால் பார்வையாளர்களும் நாடகத்தின் ஒரு அங்கமாகவே மாறினர் என்றால் அது மிகையாகாது.

​பிரம்மாண்டமான அரங்க ஒளியமைப்பு, நேர்த்தியான அரங்க முகாமைத்துவம் மற்றும் குறியீட்டுத் தன்மை மிக்க அரங்கப் பொருட்கள் என்பன பார்வையாளர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் தூண்டும் வகையில் அமைந்திருந்தன.

மலையகச் சூழலில் இவ்வாறானதொரு நவீன நாடக ஆற்றுகையைச் செய்வது மிகுந்த சவாலானது என்ற போதிலும், அதனை நாடகக் குழுவினர் வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

மலையகத்தின் குமுறலும் ‘அக்கினிக்குஞ்சு’ கருப்பொருளும்
​203 வருடங்களுக்கும் மேலான மலையக வரலாற்றில், நிலமற்றவர்களாக, சொந்த நாட்டில் அகதிகளாக, உரிமைகள் மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல்களை ஒரு மணித்தியாலத்திற்குள் மிக நுணுக்கமாகவும், அறிவியல் பூர்வமாகவும் இந்நாடகம் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

விசேடமாக, மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினையை இந்நாடகம் ஆழமாகப் பேசியது.
​ஒரு சிறு தீப்பொறி (அக்கினிக்குஞ்சு) எதிர்காலத்தில் எவ்வாறானதொரு பெரும் எரிமலையாக வெடிக்கக்கூடும் என்ற நிதர்சனமான உண்மையை நாடகத்தின் ஒவ்வொரு அசைவும், பாத்திரங்களும் உணர்த்தி நின்றன.

இதன் காரணமாகவே நாடகத்திற்கு ‘அக்கினிக்குஞ்சு’ என்ற பெயர் பொருத்தமாகச் சூட்டப்பட்டுள்ளது.

திறமையான கலைஞர்களின் சங்கமம்
​இந்நாடகத்தில் பங்குகொண்ட நடிகர்கள் அனைவரும் வெறும் தற்காலிகக் கலைஞர்கள் அல்லர்; அவர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள், கல்வியாளர்கள், பட்டதாரிகள் மற்றும் நாடகத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள்.

இவர்களுடன் இணைந்து சகோதர மொழியைப் பேசும் கலைஞர்களும், மலையகத்திற்கு அப்பால் நாடகத்துறையில் இயங்கும் வெளிப் பிரதேச நடிகர்களும் இணைந்து தங்களின் அசாத்திய நடிப்பின் மூலம் மலையக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தனர்.

நெறியாள்கையும் பின்னணி உழைப்பும்
​இந்நாடகம் தியாகராஜா சிவனேசன் அவர்களின் நெறியாள்கையில் உருவானது. நாடகத்தினை மேலும் செழுமைப்படுத்துவதற்காக பொகவந்தலாவைச் சேர்ந்த அரங்கத் தோழமை நாடகக் குழுவினர்களானா நண்பர்களான திரு. லோகானந்தன் மற்றும் செல்வராஜ் லீலாவதி ஆகியோர் ஆலோசனைகளையும் அரங்கின் அனைத்து பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் முன்னணி நாடகக் குழுக்களில் ஒன்றான செம்முகம் நாடகக் குழுவைச் சார்ந்த நண்பர்களான திரு. க.சத்தியசீலன், அனுஜன் மற்றும் கணிஸ்தன் ஆகியோர் ஒலி அமைப்பினை நேர்த்தியாகச் செய்திருந்தனர்.

பின்னணியில் வலுச்சேர்த்த கலைஞர்கள்:
​தியாகராஜா சிவனேசன், சாந்தணி மல்காந்தி, செல்வராஜ் லீலாவதி, ராசையா லோகானந்தன், ஜோன் பிரிட்டோ, கிருபாகரன், நிரஞ்சன், லீசா, சத்திய பிரியா, சிவஜோதி மலர், சீலன், கணிசன் கழக செயலாளர் சிவராஜா, பொருளாளர் திருச்செல்வம் உள்ளிட்ட பல நாடக ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்நாடகத்திற்கு வலுச்சேர்த்துள்ளனர்.

​ஆதரவும் அனுசரணைப் பங்களிப்பும்
​சங்கு கலைக்கழகத்தின் இணைப் பங்காளியான ‘சிட்ப்ஸ்’ (SIDPS) நிறுவனமும், அதன் தலைவர் திரு. கணேசன் லிங்கம் அவர்களும் நாடகத்திற்கான வழிகாட்டல்களை வழங்கி அளப்பரிய சேவையாற்றினர்.

மேலும், இந்நாடகத்திற்கான பூரண அனுசரணையை ‘விருத்தி’ மற்றும் UNOPS’ நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

பேராதரவு தந்த கலை உலகினர்
​இந்நாடகத்தினைக் கண்டுகளிப்பதற்காக மலையக சமுதாயத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், கலை ஆர்வலர்கள் எனப் பலரும் திரண்டிருந்தனர்.

விசேடமாக, இலங்கையின் மூத்த நாடகக் கலைஞர்களில் ஒருவரான முனியாண்டி காளிதாஸ் மற்றும் அவருடைய நாடகக் குழுவினர், ‘அரங்கத் தோழமை’ நாடகக் குழுவினர் உட்படப் பல நாடகக் கலைஞர்கள் வருகை தந்து, ஆற்றுகையின் பின்னர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.

மலையகச் சமூகத்திற்கு மட்டுமன்றி ஏனைய சமுதாயங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய, சர்வதேச நாடக விழாக்களில் பங்கேற்கத் தகுதியுடைய இந்த ‘அக்கினிக்குஞ்சு’ நாடகத்தைப் பார்க்க வருகை தந்து, காத்திரமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன்வைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், சங்கு கலைக்கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் கௌரவமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலையகத்தின் மாற்றத்தை நோக்கி ஒன்றிணைவோம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0