உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நேற்று (25) மாலை படகில் கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 இலட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படையினர் தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண் குண்டு, திருப்புல்லாணி, பாம்பன் குந்துகால் உள்ளிட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், உரம், அழகு சாதனப்பொருட்கள், சமையல் மஞ்சள் மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண்டபம் அடுத்த சீனியப்பன் தர்ஹா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக இந்திய கடலோர காவல்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோவ ர்கிராப்ட் ரோந்து கப்பலில் மண்டபம், வேதாளை, சீனியப்பன் தர்ஹா கடற்கரை ஓரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் படகில் பெட்டிகள் ஏற்றுவதை கண்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது படகில் இருந்த இருவர் படகுடன் கடலில் தப்பித்த நிலையில் சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளை கடற்கரையில் வீசிவிட்டு வாகனத்துடன் தப்பி ஓடினர்.

இதையடுத்து கடற்கரை ஓரம் கிடந்த 12 பெட்டிகளை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு எடுத்து வந்த கடலோர காவல்படை வீரர்கள் பெட்டியை சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இந்த வகையான வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் கொக்கின், ஹெராயின், மெத்தப்பட்டமன் போன்ற போதைப்பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால் இவ்வகையான வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதால் வலி நிவாரணி மாத்திரைகளை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த இந்திய கடலோர காவல்படையினர் தப்பி ஓடிய மர்ம நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் குறித்து மண்டபம் மரைன் பொலிஸாரிடம் தகவல் அளித்துள்ளனர்.

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்ஹா கடற்கரையில் இலங்கை கடத்துவதற்காக சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டது கடலோர கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள…

64 0 0
இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

83 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

51 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

97 0 0