உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இவ்விபத்துச் சம்பவம் குருநாகல், பன்னலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினருடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தடம்புரண்டுள்ளது. அவ்வாறு தடம்புரண்ட கார், மிக அதிவேகமாக வீதியின் அருகில் இருந்த மதிலொன்றின் மீது மோதிப் பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது காரில் பயணித்த 12 வயதுடைய சிறுவன், பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதேவேளை, காரைச் செலுத்திச் சென்ற சிறுவனின் தந்தையும், அருகில் அமர்ந்திருந்த தாயாரும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

காரின் அதிக வேகம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமா என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0