உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,

உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகள் கிடைக்கும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைய, வாகன இலக்கங்களை தற்காலிகமாக ‘A4’ அளவிலான தாள்களில் காட்சிப்படுத்தி வாகனங்களைச் செலுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.

எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரநிலைகளுக்கு மாறான, எழுத்துக்கள் மற்றும் எண்கள் தெளிவற்ற முறையற்ற தகடுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விவரித்தார்.

வழங்கல் விநியோகப் பிரச்சினைகள் (Supply Issues) காரணமாக, உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் கடந்த 10 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், இந்த விநியோகப் பிரச்சினைகள் தற்போது சீர்செய்யப்பட்டு வருவதால், எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகளை விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0