உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கணபதிப்பிள்ளை யோகராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இன்று காலை 8 மணியளவில் பாவக்கொடிச்சேனை சிவன் கோவில் பாறைப் பகுதியில், காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாகத் தரையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அது குறித்து உடனடியாக வவுணதீவு போலீஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுணதீவு போலீஸார், மட்டக்களப்பு தடயவியல் பிரிவு அதிகாரிகளை வரவழைத்து முதற்கட்டப் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியச் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

நீதவானின் உத்தரவுக்கமைய, சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவரைக் கொ*லை செய்துவிட்டு சடலத்தை இங்கு வீசிச் சென்றார்களா அல்லது பாறையிலிருந்து தவறி விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வவுணதீவு போலீஸார் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0