உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னாரில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்  பொருட்கள் வழங்கி வைப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் கீழ் இயங்கும் லைஃப் லைன்(lifeLine) தொண்டு நிறுவனத்தின் ஊடாக இவை வழங்கி வைக்கப்பட்டன.

புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டன.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரு கொடையாளிகளின் நிதிப் பங்களிப்பில், ‘லைஃப் லைன்’ (Life Line) அமைப்பின் ஏற்பாட்டில் இந்த  உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறிப்பாக படுக்கை நோயாளிகளுக்கான விசேட மருத்துவ கட்டில்கள் மற்றும் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பள்ளி வாசல்களுக்கான கம்பளங்கள் இதன்போது விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து அவதியுறும் மக்களின் நலன் கருதி தரப்பால்களும் (Tent) வழங்கி வைக்கப்பட்டன.

இவ் விசேட நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில், லைஃப் லைன் அமைப்பின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், உலமாக்கள், மதத் தலைவர்கள், முசலி தேசிய பாடசாலையின் அதிபர் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0