உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குயில்வத்தை ஸ்ரீ சிவானந்தா கல்லூரியின் கனவை நனவாக்கிய பழைய மாணவர்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

குயில்வத்தை ஸ்ரீ சிவானந்தா கல்லூரியின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒன்றை நனவாக்கும் வகையில், அக்கல்லூரியின் பழைய மாணவரான பாக்கியநாதன் ஜெனிபட் அவர்கள் தனது சொந்தப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

​கல்லூரியின் மைதான அபிவிருத்தி அல்லது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நிலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கென கனரக இயந்திரங்கள் (JCB) பயன்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனது பழைய பாடசாலையின் வளர்ச்சிக்காக, ஸ்ரீ சிவானந்தா கல்லூரியில் 2001 தொடக்கம் 2004 ஆம் ஆண்டுகள் வரை கல்வி பயின்ற மாணவர்களின் நட்பின் அடையாளமாகவும் திரு. ஜெனிபட் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாகவும் இப் பாடசாலையின் கனவு மைதானத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் தலைமையில் ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள், பழைய மாணவர்கள், தோட்ட நிர்வாகத்தினர், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலையில் நிலவி வரும் விளையாட்டு மைதான பற்றாக்குறை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0