தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!
சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 21, 38 வயதுடைய இருவர் மஸ்கெலியா பொலிசாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி சுமார் 18 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் எரிவாயு வெற்று சிலிண்டர் போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளது என கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அத்துடன், கொள்ளையிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.