உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து, முடிந்தால் அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பகிரங்க சவால் விடுத்தார்.

பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அதிரடிச் சவாலை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் நிலவி வந்த அரசியல் கலாச்சாரம் குறித்துப் பேசிய பிரதி அமைச்சர், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக என்னதான் பாரிய ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக இந்த நாட்டில் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றவொரு வலுவான பிம்பமும் கருத்தும் மக்கள் மத்தியில் நிலவி வந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

“ஆனால், தற்போதைய புதிய அரசின் கீழ் அண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள பல பாரிய சட்ட வழக்குகள் காரணமாக, ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான சட்ட ரீதியான அழுத்தங்கள் தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளன. சட்டம் தன் கடமையைச் சுயாதீனமாகச் செய்யத் தொடங்கியுள்ளது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் தீர்ப்பும் எதிர்காலச் சட்ட நடவடிக்கைகளும்
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, நாட்டில் நிலவிய ஊழல் நிறைந்த மற்றும் முறையற்ற முகாமைத்துவம் கொண்ட குடும்ப ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக நாட்டு மக்கள் ஏற்கனவே தங்களின் ஜனநாயக ரீதியிலான கடுமையான தீர்ப்பை வழங்கிவிட்டனர் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டார்.

அத்துடன், கடந்த காலங்களில் மக்களின் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்த மற்றும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் எதிராக, தகுதி தராதரங்கள் பாராது வரும் காலங்களில் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0