உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; பெண் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா பகுதியிலுள்ள வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை நேற்று சனிக்கிழமை (23) முற்றுகையிட்ட பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்ததுடன் இருவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முதலையிக்குடா பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் முற்றுகையிட்ட கசிப்பு உற்பத்தி நிலையத்திலிருந்து 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றம் 75000 மில்லி லீற்றர் கசிப்பு பீப்பாய்கள் உட்பட பல உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பகுதிகளில் உள்ள களப்புடன் உள்ள கண்ணா காடு பகுதிகளில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியை செய்து அங்கிருந்து தோணிகள் மூலமாக தாழங்குடா, மாவிலங்குத்துறை, கல்லடி, நாவற்குடா, மட்டு கருவப்பங்கேணி போன்ற பிரதேசங்களுக்கு கசிப்பு விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சட்டவிரோத செயற்பாட்டு தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன தலைமையில் இரு குழுவினர் அந்த களப்பு பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன்போது களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, 8 பீப்பாய்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்னும் ஒரு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட போது உற்பத்தியில் ஈடுபட்வர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் அங்கிருந்து பிளாஸ்ரிக் போத்தல்கள் கொண்ட 4 பொதிகள், 08 ஊறல் பீப்பாய்கள், 02 தோணிகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0