உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொள்ளைக்காகப் பயன்படுத்திய திருடப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே ஆகிய பொலிஸ் பிரிவுகளில், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் கொள்ளையிடப்பட்டதாகப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஹோமாகம வைத்தியசாலைப் பகுதியில் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரை ஜீப் வாகனத்தால் வழிமறித்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில்,
அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியே குறித்த கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, கிரேன்ட்பாஸ் பகுதியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளையும் அவர் திருடியுள்ளதாகவும், அந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளையும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஒரேயொரு அடகு வைக்கும் நிலையத்திற்கே அவர் விற்பனை செய்துள்ளார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேக நபர், கடுமையான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0