உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாளை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளேன்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக, தமக்கு பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் இந்த அழைப்பின்படி, நாளை திங்கட்கிழமை தாம் தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகவும் விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் சுயாதீனமான அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில், தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவே நாம் அங்கு சென்றோம்.

ஆனால், அந்த உன்னதமான செயலுக்கு அநாவசியமாகத் தடையை ஏற்படுத்திய பாதுகாப்புத் தரப்பினர், இப்போது எங்களை குற்றவாளிகளைப் போல் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கட்டளையிட்டு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் கூறுகின்றார். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லை.

நீதி அமைச்சுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டுள்ள மல்வானை மாளிகையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக தற்போதைய அரசோ அல்லது பொலிஸாரோ இதுவரை எந்தவொரு சட்டப் படியிலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நாம் ஒரு பொது இடத்துக்கே அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றோம். ஆனால் எமக்கு எதிராக ஒரு விதமான சட்டம் பாய்கின்றது. அதேவேளை, அரசின் சொத்தான மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் முற்றாக மௌனமாக இருக்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0