உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில்சந்தித்துப் பேசிய இலங்கை எம்.பி. அர்ச்சுனா!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

தமிழக அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, பின்வரும் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழர் நலன்: தாயகம் மற்றும் தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வு, மீனவர் பாதுகாப்பு: இருநாட்டு மீனவர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் அவர்களது பாதுகாப்பு குறித்த விவகாரங்கள், ஒன்றுபட்ட வளர்ச்சி: இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சமூக ரீதியான கூட்டு வளர்ச்சி.

இந்தச் சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

32 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0