அறிவொளி வாசிப்புத்திறன் போட்டி ஆரம்பம்.!
வாசிப்பு மேம்பாட்டை உயர்த்தும் நோக்கில், நாவல் நகர் கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் ‘அறிவொளி வாசிப்புத்திறன் போட்டி’ இன்று இனிதே ஆரம்பமானது.
இப்போட்டிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெறவுள்ளன.
இன்றைய ஆரம்ப விழாவில், இந்தியத் தமிழகத்தின் புத்தணாம்பட்டி நேரு நினைவுச் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை இணைப்பாளர் ஐயா ஜெயராமன் அவர்களும், பேராசிரியர் டாக்டர் பாலமுருகன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வித்தியாலய அதிபர் பெரியசாமி பிள்ளை லோகேஷ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.





