உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

டித்வா புயல் காரணமாக மாயமான முச்சக்கரவண்டி மீட்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

டித்வா புயல் காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண்சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஸ்பன்ன நகரின் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு மற்றும் கற்பாறைகள் வீழ்ந்து மூடியது.

அப்பகுதியில் காணப்பட்ட அதிக ஆபத்து காரணமாக மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்றதுடன், தற்போதைய நாட்களிலும் அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மண் மற்றும் கற்பாறைகளை அகற்றும் போதே இந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது வலப்பனை டிப்போவில் பணிபுரியும் பேருந்து நடத்துனர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.

அன்று இரவு இந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற வேளையிலேயே, இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை அவர் எதிர்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0