உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிளவுபடாத நாட்டை உருவாக்கிய போர் வெற்றியை மறக்க முடியாது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“இலங்கை இன்று பிளவுபடாத ஒரே நாடாக இருப்பதற்கு யுத்த வெற்றியே காரணம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த, இராணுவத்தினரை கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பின்னரே அவர் ஊடகங்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முப்பத்தொரு ஆண்டுகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த தினத்தைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். நாட்டைப் பாதுகாத்த எமது மாவீரர்கள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.

எமது இராணுவ வீரர்களின் ஈடு இணையற்ற உயிர்த்தியாகத்தால் தான் இன்று நாடு பிளவுபடாமல் ஐக்கியமாக உள்ளது. இது நாம் அடைந்த பாரியதொரு வெற்றியாகும்.

தற்போதைய அரசின் செயற்பாடுகள் எப்படியிருந்தாலும், மக்கள் மத்தியில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுகின்றது. மக்கள் மிகவும் நிம்மதியாக உள்ளார்கள்.

இந்தப் புனிதமான தருணத்தில் அரசியல் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. நாட்டைப் பாதுகாத்த வீரர்களை நினைவுகூர்வதே இன்றைய பிரதான நோக்கமாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0