உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய முயன்ற போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். எனினும், அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதன்போது, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய முயற்சித்துள்ளார். இதன்போது, சந்தேகநபர் அந்தப் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் காயமடைந்துள்ளதுடன், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0