உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல்; ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தாக்குதலை நடத்தியவரும் அதே பாடசாலையில் 12ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் பயிலும் ஒரு மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாக்குதலை நடத்திய மாணவருக்கும் காயமடைந்த மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இன்று (13) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு மாணவர் மீது தாக்குதல் நடத்தியபோது, அதனைத் தடுக்கச் சென்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவரை, தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதத்துடன் எப்பாவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பாக எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0