உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கபிலவின் கையடக்கத் தொலைபேசியை திறக்க முடியாமல் திணறும் பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான மரண விசாரணை, கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேகர முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணையின் புதிய முன்னேற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

மறைந்த கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசியை இதுவரை அணுக முடியவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குறித்த தொலைபேசி ‘பேஸ் ஐடி’ மூலம் பூட்டப்பட்டுள்ளதால், அதனைத் திறக்கத் தயாரிப்பு நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

கபில சந்திரசேனவின் உடலில் இருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை மேலதிக ஆய்வுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ‘நெக் டை’ மற்றும் சில மருந்துகள், அடையாளம் தெரியாத பொருட்கள் ஆகியவற்றை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் மேலதிக முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக, வழக்கை நாளை வியாழக்கிழமை வரை நீதிவான் ஒத்திவைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

32 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0