உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

“மஹிந்த ராஜபக்ஷ திறைசேரியைக் கொள்ளையடிக்கவில்லை, மாறாக மக்களின் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்” என்று அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தது. விசாரணையின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறிய போது, அங்கு திரண்டிருந்த மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மனோஜ் கமகே உரையாற்றினார்.

விசாரணைக்கான காலம் குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

“மே மாதம் என்பது பிரபாகரனின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை அரசு குறிவைத்துள்ளது. பிரபாகரனின் ஆத்மாவை சாந்தியடைய வைக்கவே ஆளுந்தரப்பு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவை ஒரு ‘சிங்கம்’ என வர்ணித்த அவர், அவர் ஒருபோதும் குகைக்குள் ஓடி ஒளியமாட்டார் என்றும், சட்டத்துக்கு மதிப்பளித்து நேடியாக வந்து வாக்குமூலம் வழங்கிச் சென்றுள்ளார் என்றும் கூறினார்.

திறைசேரி பிணைமுறி மோசடி மற்றும் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்களையும் இதேபோன்று அழைத்து வந்து விசாரிக்க அரசுக்குத் துணிவிருக்கின்றதா என்றும் அவர் சவால் விடுத்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்நாட்டு அரசியல் கலாச்சாரம். அவர் மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்” என்றும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

32 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0