உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குப்பை மேட்டில் பரிதாபமாக உயிரிழந்த யானை ; வாழைச்சேனையில் சோகம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடமொன்றில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவு கொட்டும் தளத்திற்கு வழமையாக குப்பைகளை கொட்டச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், யானையை உயிருடன் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்.

குப்பை மேடுகளைக் கடந்து யானை இருந்த இடத்தை சென்றடைந்த போது, அது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் யானையின் உடலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குப்பை மேடுகளில் உணவு தேடி வரும் வன யானைகள் பல்வேறு அபாயங்களை எதிர்கொள்வதாகவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய தீர்வுகள் அவசியம் என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

32 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0