உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தோட்ட மக்களின் பாதுகாப்பு:முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

“மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின் பங்கேற்புடன் கூட்டமொன்றை நடத்துவதற்குரிய ஏற்பாட்டைச் செய்வதற்குத் தயார்.” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.  

இரத்தினபுரி – நீலகாமம், மஸ்கெலியா – மொக்கா தோட்டம், நுவரெலியா – டெல்மா தோட்டம் ஆகிய பகுதிகளில் தோட்ட நிர்வாக தரப்பினரால், தொழிலாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இன்று கருத்துகளை முன்வைத்தனர்.

ஜீவன் தொண்டமான் எம்.பி. கருத்து வெளியிடுகையில்,”தோட்டப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துபவர்கள் கைது செய்யப்படுகின்றனர், பிணை வழங்கப்படுகின்றது என்பது எங்களுக்கும் தெரியும். நிரந்தர தீர்வையே நாம் வலியுறுத்துகின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “உங்களது ஆட்சிகாலத்தில்போல் விசாரணைகள் தாமதிக்கப்படுவதில்லை. நேற்றுமுன்தினமும், நேற்றும் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர்  நீதிமன்ற உத்தரவுக்கமைய நாம் செயல்படுவோம். மேற்படி சம்பவங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இனி இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

இது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடுவதற்கு உங்களுக்கு (மலையகப் பிரதிநிதிகள்) சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாம் தயார்.  நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ அல்லது நுவரெலியாவிலோ சந்திப்பை நடத்துவோம்.

எமது பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்களும் எமது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். நாம் உரிய தலையீடுகளை மேற்கொண்டுவருகின்றோம். – என்றார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி.,

“பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளை அழையுங்கள், நீங்களும் (அமைச்சர்) வாருங்கள், பொலிஸ்மா அதிபரும் வரட்டும். நாம் பேச்சு நடத்துவோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.” – என்றார்.

“உங்களது யோசனை தொடர்பில் பிரச்சினை இல்லை. அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மலையக மக்கள் தொடர்பில் எமக்குப் பொறுப்பு உள்ளது.” – என்று அமைச்சர் பதிலளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0