உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
43 பார்வைகள்

கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக   கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்.

கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று  தீர்ப்பின் அடிப்படையில் இவ்வாறு தெரிவித்தார்.

வழக்கில் எதிர் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  தெரிவித்ததாவது கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்.

இரண்டு மாத காலத்தினுள் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் அதிலும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லை மீள் நிர்ணயமும் மற்றையது கல்முனை பகுதிக்கான எல்லையும் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.என தெரிவிக்கப்பட்டது.இதில் 3 உள்ளுராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என நானும் வாதாடினேன்.ஆனால் உரிய மாகாண சபை அமைச்சருக்கும் எல்லை மீள் நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவும் செய்ய வேண்டிய விடயம் என மன்று சுட்டிக்காட்டியது.

2 மாதத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.அதன் பின்னர் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை நாங்கள் உண்மையில் வரவேற்கின்றோம்.இது தவிர தற்போது சாய்ந்தமருது நகர சபை மற்றும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் தற்போது நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனில் இரண்டு சபைக்குமான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை.ஆனால் இந்த இரண்டு மாதத்தினுள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அறிவித்து அதன் பின்னர் தான் தேர்தல் நடாத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதை உணர்வதாக குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0