உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மட்டக்களப்பு, செங்கலடி – கணேசபுரம் பகுதியில் தனது 11 வயது மகனை இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை ஏறாவூர் பொலிஸார் நேற்று 05 ஆம் திகதி இரவு கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த வீட்டில் சிறுவன் ஒருவன் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு (119) இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்ட வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர்.

பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தாய், இரும்பு கரண்டியை நெருப்பில் இட்டு பழுக்கக் காய்ச்சி, அதனைத் தனது 11 வயது மகனின் கையில் வைத்து அழுத்திச் சித்திரவதை செய்துள்ளார்.

காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக அவரது தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற தாயே மகனுக்குச் சூடு வைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0