உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குப் புதிய உறவின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:-

“விஜயை இதுவரைகாலம் நடிகராகப் பார்த்த மக்கள் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் வாக்குமூலம் தமிழகத்தில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது கச்சத்தீவு குறித்து அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

நான் அமைச்சராக இருந்தபோது அதிக தடவைகள் தமிழ் நாடு சென்றுள்ளேன். அங்கு கச்சத்தீவு என்பது முக்கிய பிரச்சினை கிடையாது. தமிழகத்தில் முகாம்களில் வாழும் நமது சொந்தங்களின் பிரச்சினையே முதன்மையானது. அதேபோல் மீனவர் பிரச்சினையும் தொடர்கின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியின் கீழ் விஜய் இலங்கை வருவார் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்தப் புதிய உறவின் ஊடாக மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என நம்புகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0