உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரேரணையை, எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக தலைமையில் சென்ற குழுவில், பிரதி முதற்கோலாசான்களான ஜே.சி.அலவதுவல, அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அண்மைக்காலமாக நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் வெளியிடப்படும் கருத்துக்கள், நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரம் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களைப் பாதிக்கும் என்பதால், இது குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று இந்தப் பிரேரணை ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0