உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இன்றையதினம் Humedica சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட முதலுதவிப் பெட்டிகள் (First Aid Kits), வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

மக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால முதலுதவித் தேவைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில், பிரதேச செயலகத்திற்கும் அத்துடன் பின்வரும் கிராம அலுவலர் J/422, J/424, J/427, J/428, J/431 பிரிவுகளுக்கும் முதலுதவிப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

குறித்த முதலுதவிப் பெட்டிகள் நேற்றையதினம் Humedica நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற நிலையில் மேற்குறிப்பிட்ட கிராம தொகுதிகளின் அந்தந்தப் பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன.

இதன்மூலம் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள், அவசர விபத்துக்கள் அல்லது மருத்துவத் தேவைகளின் போது உடனடி முதலுதவிச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தின் இந்த முன்னெடுப்பு மற்றும் Humedica நிறுவனத்தின் மனிதாபிமான உதவி ஆகியவற்றுக்கு கிராம மட்ட உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0