உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பெருந்தோட்டங்களுக்கு கூலிப்படை வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் நடந்த அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நேற்று மாபெரும் போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பு, ஐந்துலாம்புச் சந்தியில் ‘நாம் மலையகம்’ எனும் அமைப்பினரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடக அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் எனப் பல தரப்பினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்திருந்தனர்.

நீலகாமம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தொழிலாளர் குடியிருப்பொன்றைப் பிரத்தியேக பாதுகாப்பு படையைக் கொண்ட தோட்ட நிர்வாகம் அண்மையில் அடித்து நொறுக்கியது. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மலையகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கறுப்பு ஆடை அணிந்துகொண்டு, முகத்தை மூடும் வகையிலான தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டு தோட்டத்துக்குள் புகுந்த கும்பல், வன்முறையைக் கையாண்டே வீட்டை அடித்து நொறுக்கியது.

நாட்டில் சட்டம், ஒழுங்கை கையாள்வதற்குப் பொலிஸார் இருக்கையில், தண்டனை வழங்க நீதிமன்றம் செயற்படுகையில் பிரத்தியேகப் பாதுகாப்புக் குழு, சட்டம், ஒழுங்கை கையில் எடுத்தமை அடக்குமுறையின் உச்சக்கட்டம், ஜனநாயக விரோதச் செயல் எனப் பலரும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் நீலகாமம் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் நாம் மலையகம் அமைப்பின் ஏற்பாட்டில் நீலகாமம் தோட்டத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையின் முக்கிய அங்கமான காணி உரிமையை வென்றெடுக்கும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், பெருந்தோட்டப் பகுதிகளுக்குக் கூலிப்படை வேண்டாம் என வலியுறுத்தியும் கொழும்பில் நேற்று அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0