உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தலைக்கவசம் இன்றி தப்பி ஓடிய நபர், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
17 பார்வைகள்

தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் பயணித்த போது காவல்துறையினரின் சமிக்ஞையை மதிக்காமல் தப்பியோடி, வீட்டில் மறைந்திருந்த நபர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகியோர் இன்று மே 5 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுமுல்ல காவல்துறையினர் இரவு நேர உந்துருளி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலைக்கவசம் அணியாமல் சென்ற உந்துருளி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கியுள்ளனர். எனினும், ஓட்டுநர் அதனைப் பொருட்படுத்தாமல் சென்றுள்ளார்.

காவல்துறையினர் அவரைப் பின்தொடர்ந்து நிறுத்துமாறு பலமுறை அறிவுறுத்தியும், அதனைக் கண்டுகொள்ளாத ஓட்டுநர் காவல்துறையினரைப் பகிங்கரமாகத் திட்டியவாறு மொரட்டுமுல்ல வில்லோராவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று மறைந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் சந்தேகநபரை வீட்டை விட்டு வெளியே கொண்டுவர காவல்துறையினர் முயன்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில், சந்தேகநபரும் வீட்டின் உரிமையாளரும் இணைந்து காவல்துறையினரின் கடமைக்குத் தடையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுமுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0