உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ரெலோ தலைவர் தோழர் ஸ்ரீசபாரத்தினத்தின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் கோண்டாவிலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
18 பார்வைகள்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவரும், போராட்ட முன்னோடியுமான தோழர் ஸ்ரீசபாரத்தினம் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கடந்த 1986ஆம் ஆண்டு தோழர் சிறீசபாரத்தினம் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான கோண்டாவில் கிழக்கு, அன்னங்கை தோட்ட வெளி பகுதியில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, நினைவேந்தல் குழுவின் தலைவர் எஸ். செந்தூரன் தலைமை தாங்கினார்.

நிகழ்வின் போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முக்கிய விருந்தினர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் பலர் கலந்துகொண்டனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்.

ரெலோ (TELO) இயக்கத்தின் முன்னாள் போராளிகள். அன்னாரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைவரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0