உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

 இலங்கை – இந்திய பாலம் அமைக்கும் தருணம் இது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழி இணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா மீண்டும் வலியுறுத்தியுள்ளமையோடு, இது விடயத்தில் தயக்கம் காட்டிக் கொண்டிருப்பதற்கான காலம் முடிந்துவிட்டது என்றும் கூறினார்.

கடல் வழியாகக் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் சுமார் 300 கிலோமீற்றர் என்றும், ஆனால் நமது இரு நாடுகளுக்கும் மிக அருகிலுள்ள இடங்களான இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30 கிலோமீற்றர் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இருப்பினும், நேரடிச் சாலை இல்லை, ரயில் பாதை இல்லை. பெரிய அளவில் இயங்கும் படகு சேவை இல்லை, மின்சாரக் கட்டமைப்பு இணைப்பு இல்லை, குழாய்வழித் தொடர்பு இல்லை. வெளிப்படையாகச் சொல்வதானால், இது ஒரு முரண்பாடான நிலை, இரண்டு அறைகளுக்கும் பொதுவான சுவரிலேயே, அந்த இரண்டு அறைகளுக்கு இடையில் ஒரு கதவை அமைக்க முடியும் என்றபோதிலும், அருகருகே உள்ள இரண்டு அறைகளை வெளியே உள்ள ஒரு நடைபாதை வழியாக மட்டுமே இணைப்பது போல இது உள்ளது” என்றும் அவர் கூறினார்.

“பாக் ஜலசந்தியின் குறுக்கே ஒரு பாலம் அல்லது சுரங்கப்பாதை வழியாக தரைவழி இணைப்பு ஏற்படுத்துவது குறித்து பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றது, உலகம் முழுவதும் இதுபோன்ற வழித்தடங்களுக்குப் போதுமான எடுத்துக்காட்டுகள் உள்ளன, அதன் பொறியியல் நன்கு அறியப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரம் கவர்ச்சிகரமானது.

இது போன்ற பாலங்கள் எங்கு கட்டப்பட்டிருந்தாலும், அதன் நன்மைகள் மறுக்க முடியாதவை. ஆனால் நாம் தொடர்ந்து தயங்குகின்றோம். ஆனால் நான் தெளிவாகச் சொல்கின்றேன், தயக்கம் காட்டிக் கொண்டிருப்பதற்கான காலம் முடிந்துவிட்டது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நிரந்தர இணைப்பு, இந்தப் பிராந்தியம் முழுவதின் பொருளாதாரப் புவியியலையும் மாற்றியமைக்கும்.

எந்தவொரு துறைமுக விரிவாக்கமோ அல்லது விமான நிலைய மேம்பாடோ தனியாக அடைய முடியாத வகையில், இலங்கையை அது விரும்பும் ஒரு மையமாக இந்த ஒழுங்கு மாற்றும்” என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“இன்று இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்குகின்றது. டித்வா போன்ற இயற்கை சீற்றங்கள் அல்லது மேற்கு ஆசியாவில் ஏற்படும் மோதல்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மை ஆதாரமாக இந்தியா விளங்குகின்றது.

மேலும், இந்த நாட்டுக்கான  வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மிகப்பெரிய ஆதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு, மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகள் உட்பட, இலங்கையில் செய்யப்பட்ட இந்திய முதலீடுகள் மொத்த முதலீட்டில் 50 வீதத்தைத் தாண்டியது.

இந்திய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளன” என்றும் அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0