மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் லாகுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வயலில் உள்ள மரமொன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த வாடியில் இருந்தபோதே இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.