பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து.!
நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் நாவலப்பிட்டி, ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட 11 மாணவிகளும், இரண்டு மாணவர்களும் அடங்குவதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அந்த வேனை ஓட்டிச் சென்ற சாரதியும் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். குலதுங்கவின் வழிகாட்டலில் நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.