சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது.!
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இன்று காலை மீசாலை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முற்பட்ட வேளை சாரதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் பொலிஸார் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.