உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விஜய்யின் விஸ்வரூப வெற்றிக்கு சுமந்திரன் வாழ்த்து.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தமிழக சட்டசபைத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ம. ஆ. சுமந்திரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும், அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.” – என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், ஈழத் தமிழர்களின் விவகாரங்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுமந்திரனின் இந்த வாழ்த்துச் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0