உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி; இந்தியப் பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த சஜித்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சஜித்,
“மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எனது வாழ்த்துகள். இந்த மக்கள் ஆணை மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகப் பங்கேற்பின் நீடித்த வலிமையையும் பிரதிபலிக்கின்றது. இந்தியா தொடர்ந்தும் முன்னேற்றமடையவும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கவும் வாழ்த்துகின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாகப் பிராந்தியக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த மேற்கு வங்க மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவின் இந்த வாழ்த்துச் செய்தி வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

4 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0