உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்; மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் சித்த வைத்திய முகாம் ஒன்று நேற்றையதினம் (03.05.2026) புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சித்த வைத்திய முகாமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை ஆகியவற்றின் இணைப்பில் நடத்தப்படுகிறது.

இம்முகாமில் கபம், சுரம், பித்தம், பீனிசம், ஆஸ்துமா, மூட்டு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்திய சேவைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஐக்கிய இராச்சியம் (UOJAAUK) பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில் இடம்பெறுகின்றது.

மக்களின் நலனுக்காக மாதந்தோறும் இரண்டு நாட்கள் இவ்வாறான சித்த வைத்திய முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிகழ்வில் வைத்தியர்கள், சித்த மருத்துவ மாணவர்கள், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், தாதியர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0