அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது.!
நுவரெலியா – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹளுவெல்ல பகுதியில் உரிய அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நோர்வூட் மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 24 முதல் 43 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.