உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கோர விபத்தில் செவிலியர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

சிலாபம் பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்டில் பணியாற்றிய, அனைவராலும் ‘பொடி மாஸ்டர்’ என அன்போடு அழைக்கப்படும் இளம் 8செவிலியர் ஹசித மலவிசிங்க பேருந்து விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஹெட்டிபொல – படுவஸ்நுவர வீதியின் கொட்டன்பிட்டிய சந்தியில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது
நிகவெரட்டிய பணிமனைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற லொறி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளது. பின்னர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரக் கடையொன்றுக்குள் பேருந்து புகுந்தது. அந்த நேரத்தில், சிலாபம் பொது வைத்தியசாலையின் பணிக்குச் செல்வதற்காக அந்தக் கடையின் அருகில் பேருந்துக்காகக் காத்திருந்த ஹசித மலவிசிங்க என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கடையின் உரிமையாளர் பேருந்து கட்டுப்பாடின்றி சீறி வருவதைக் கண்டு தப்பித்த போதிலும், ஹசிதவுக்கு அதனை அவதானிக்க முடியாதமையால் இந்த விபரீதம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குருநாகல் செவிலியர் கல்லூரியின் 2017 – ஏ அணியைச் சேர்ந்த ஹசித மலவிசிங்க, ஒரு சிறந்த சுகாதாரப் பணியாளராகவும், நோயாளிகளிடம் மிகுந்த அன்பு காட்டும் ஒருவராகவும் திகழ்ந்தார். இதன் காரணமாகவே சக ஊழியர்கள் அவரை ‘பொடி மாஸ்டர்’ எனச் செல்லமாக அழைத்து வந்தனர்.

இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். அவருக்கு இரண்டு வயதுடைய மகன் ஒருவன் உள்ளான்.

தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மிக விரைவில் வெளிநாடு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்திருந்தார்.

விபத்துத் தொடர்பாக நிகவெரட்டிய டிப்போ பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாரதியின் கவனக்குறைவா அல்லது பேருந்தின் இயந்திரக் கோளாறா என்பது குறித்து ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனது கடமைக்குச் செல்லும் வழியில் ஒரு இளம் உயிரை காவு கொண்ட இந்தச் சம்பவம் சிலாபம் மற்றும் ஹெட்டிபொல பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0