உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிதி அமைச்சின் மோசடி, அதிகாரி மர்ம மரணம்: விரிவான விசாரணை கோருகின்றது சஜித் அணி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்புப் படையணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க வலியுறுத்தியுள்ளார்.

எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2.5 மில்லியன் டொலர் திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த ரங்க நிஷாந்த என்பவர், ஜே.வி.பி. அமைப்பின் உறுப்பினர் எனவும், அவர் முறையான பதவி உயர்வுகள் இன்றி அரசியல் செல்வாக்கின் மூலமே நிதி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டவர் எனவும் நிரோஷன் பாதுக்க சுட்டிக்காட்டினார்.

அவரது மரணம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில், உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது எனவும், அநேகமாக அந்தக் காயங்கள் அவராகவே ஏற்படுத்திக் கொண்டவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மறுத்த நிரோஷன் பாதுக்க, “தனது கையின் நரம்பையும் காலின் நரம்பையும் வெட்டிக்கொண்ட ஒருவர், மற்றுமொரு நரம்பை வெட்டும் அளவுக்கு பலமாக இருப்பாரா என்பது பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது. இது ஒரு மர்மமான மரணம் என்பதால் வெறும் சாதாரண மரண விசாரணையோடு இதனை முடித்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.

மத்திய வங்கியின் வசம் 75 ஆண்டுகளாக இருந்த அரச கடன் முகாமைத்துவப் பணிகள் 2026 ஜனவரி முதல் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்திலேயே இடம்பெற்றுள்ளது. நிதி அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் பொறுப்பின் கீழ் இப்பணிகள் இருந்தபோதே இந்த மோசடி நடந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் மே தின உரையை விமர்சித்த அவர், மே 25ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்று ஜனாதிபதி முன்கூட்டியே அறிவித்தமையானது நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் செயல் என்றும் சாடினார்.

துறைமுக கொள்கலன் மோசடி, நிலக்கரி மோசடி மற்றும் நிதி அமைச்சின் திருட்டுச் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி ஏன் மௌனம் காக்கின்றார் என்றும் இதன்போது அவர் கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0