தப்பியோட முயற்சித்த கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம்.!
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிலரை கல்கமுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றபோது பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவர் இன்று (03) பொலிஸ் நிலையத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரம் பின்னோக்கி ஓடி தப்பிக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவருக்கு முழங்காலுக்கு கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.