உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்; வேலியை அகற்றினால் சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து அச்சுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி காணப்படுவதை உறுதிப்படுத்திய தவிசாளர், கடந்த 28ஆம் திகதி நில அளவையாளர்கள் மூலம் அதனை அடையாளம் கண்டு அளவீடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, குறித்த வீதியை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என விகாராதிபதிக்கு தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

அக்கடிதத்தில், “11ஆம் திகதிக்குள் வீதி விடுவிக்கப்படாவிட்டால், 12ஆம் திகதி பிரதேச சபையினால் வேலி அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்பட்டால், அதற்கான செலவை விகாராதிபதியே செலுத்த வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தலுக்கு எதிராக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தவிசாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இதன்போது, “வேலியை அகற்றினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் தவிசாளரை மிரட்டும் தொனியில் கூறினார்கள் என்று தெரிகின்றது.

பொலிஸாரின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த தவிசாளர் சோ.சுகிர்தன், “சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான் தயார். இது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி என்பதற்கான ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. விகாராதிபதி வீதியை விடுவிக்காவிட்டால், நாம் வேலியை அகற்றி வீதியை மீட்போம். அதற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அதனை நாம் அங்கு சந்திப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி விகாரை அமைந்துள்ள காணியை அளக்க முற்பட்டபோது, “காணிகள் விடுவிக்கப்படும்” என்ற உறுதிமொழியை மாவட்ட அல்லது பிரதேச செயலர் கடிதம் மூலம் வழங்கினால் மட்டுமே அளவீடு செய்ய அனுமதிப்போம் என காணி உரிமையாளர்கள் மறுத்திருந்தனர். இதன் காரணமாக அன்றைய தினம் காணி அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன என்று யாழ். மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0