உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பலத்த மின்னலுடன் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03) இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில்,
இந்த மாத இறுதியளவில் மின்னலுடன் கூடிய மேகங்கள் உருவாகும் சாத்தியம் குறையக்கூடும் எனத் தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் மேகங்கள் மூலமே மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. எனவே, பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது மின்சாதனங்களைப் மின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பதே மிகவும் பொருத்தமானது.

மின்னல் அனர்த்தங்களைத் தவிர்க்க, மழை பெய்யும் போது வயல்வெளிகள், திறந்த வாகனங்களில் பயணம் செய்தல் மற்றும் உயர்ந்த மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்ததாக தென்மேற்கு பருவமழை காலம் மே 25 ஆம் திகதிக்கு பின்னரே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை காலத்தில் காற்று ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசுவதால், மின்னல் உருவாகும் வாய்ப்பு குறையும். இடைப் பருவமழை காலத்திலேயே மின்னல் அபாயம் அதிகமாக இருக்கும் எனவும், பருவமழை தொடங்கிய பின் மின்னல் பாதிப்புகள் மற்றும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் பதுளை, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0