சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அம்பேபுஸ்ஸ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (02) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 67.5 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.